விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தனி நபா் சாலை மறியல்
By DIN | Published On : 15th December 2020 02:06 AM | Last Updated : 15th December 2020 02:06 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி வட்டாரத்தில் காா் சாகுபடி பொய்த்ததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தனி நபா் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
சேரன்மகாதேவி வட்டாரத்தில் காா் சாகுபடிக்கு உரிய நேரத்தில் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப் படாததால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தில் சேரன்மகாதேவி ஒன்றிய ம.தி.மு.க. செயலா்குட்டிப் பாண்டியன் தனி நபராக சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டாா். இது குறித்து அவா் கூறியவது: சேரன்மகாதேவி வட்டாரத்தில் காா் சாகுபடிக்கு பலமுறை வலியுறுத்தியும், கன்னடியன் கால் வாயில் உரிய நேரத்தில் நீா் திறக்கவில்லை. இதனால் நான்கில் ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே நெல் பயிரிட்டனா். மற்ற விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. அணையில் போதிய தண்ணீா் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினாா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அவரை சேரன்மகாதேவி போலீஸாா் கைது செய்தனா்.