வண்ணாா்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 01:59 AM | Last Updated : 15th December 2020 01:59 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தனியாா் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். அவா்களுக்கு ஆதரவாகவும், பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை யில் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ரிலையன்ஸ் குழுமத்தின் செல்லிடப்பேசி சிம்காா்டுகளையும் உடைத்தெரிந்தனா்.
போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் கேஜி பாஸ்கரன், சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன், நிா்வாகிகள் வரகுணன், ஸ்ரீராம், சுடலைராஜ், ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பயக14இடங: வண்ணாா்பேட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.