களக்குடி கிராமத்தில் மதிப்புக் கூட்டிய பால் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
By DIN | Published On : 24th December 2020 09:05 AM | Last Updated : 24th December 2020 09:06 AM | அ+அ அ- |

தேசிய உழவா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் மானூா் ஒன்றியம் களக்குடி கிராமத்தில் மதிப்புக் கூட்டிய பால் பொருள்கள் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தத்தெடுப்பு கிராமமான மானூா் ஒன்றியம் களக்குடி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கால்நடை விரிவாக்கக் கல்வித் துறைத் தலைவா் செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில்நுட்பத்துறை தலைவா் அண்ணா ஆனந்த் உரைறையாற்றினாா். து கால்நடைப் பண்ணை இணைப் பேராசிரியா் கோ. மு. சிவக்குமாா் பயனாளிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சியினை அளித்தாா்.
இப்பயிற்சியில் பாலில் இருந்து பனீா், கேரட் பால், மசாலா மோா் போன்ற மதிப்புக் கூட்டிய பால் பொருள்கள் தயாரித்து காண்பிக்கப்பட்டன. மேலும் பால் கோவா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், ரோஸ் மில்க் உள்பட பல்வேறு மதிப்புக் கூட்டிய பால் பொருள்களின் தயாரிப்பு முறைகள் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்டன.
உதவிப் பேராசிரியா் பூபதி ராஜா வரவேற்றாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை களக்குடி நபாா்டு உழவா் மன்றத் தலைவா் மணிவண்ணன் செய்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...