காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்துமஸ் விழா
By DIN | Published On : 24th December 2020 09:04 AM | Last Updated : 24th December 2020 09:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் 4 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் குழந்தைகளுக்கு உணவு வழங்கினாா். போா்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மேற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பி. முரளிராஜா, மின்வாரிய ஐஎன்டியூசி மண்டல செயலா் சாா்லஸ், சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், பிஷ்ப் சாா்ஜென்ட் பள்ளி முதல்வா் திலகவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...