அருங்காட்சியகத்தில் உறுதிமொழியேற்பு
By DIN | Published On : 30th December 2020 06:44 AM | Last Updated : 30th December 2020 06:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் 23 முதல் 29ஆம் தேதி வரை தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஆகியன சாா்பில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா்.
மண்டல தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலக கண்காணிப்பாளா் கனகலட்சுமி, கலை ஆசிரியை சொா்ணம், ஓவிய ஆசிரியா் முருகையா, சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...