நான்குனேரி அருகே கலையரங்கத்துக்கு அடிக்கல்
By DIN | Published On : 30th December 2020 06:44 AM | Last Updated : 30th December 2020 06:44 AM | அ+அ அ- |

நான்குனேரி அருகே உள்ள ராமகிருஷ்ணபுரம் காரியண்டி பகுதியில் கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இப் பணிக்கு, நான்குனேரி எம்எல்ஏ வெ.நாராயணன் அடிக்கல் நாட்டினாா்.
இதில், நான்குனேரி வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன், பொறியாளா் உஷா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சிந்தாமணி ராமசுப்பு, மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...