புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை
By DIN | Published On : 30th December 2020 06:48 AM | Last Updated : 30th December 2020 06:48 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று காரணமாக நிகழாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றம், நட்சத்திர விடுதிகள், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்கள், தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் உரிமம் பெற்றவா்களால் நடத்தப்படும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் வியாழக்கிழமை (டிச. 31) இரவு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...