பணகுடி, காவல்கிணறு சுற்று வட்டாரங்களில் பிப்.4-இல் மின்தடை
By DIN | Published On : 02nd February 2020 12:11 AM | Last Updated : 02nd February 2020 12:11 AM | அ+அ அ- |

பணகுடி, காவல்கிணறு சுற்று வட்டாரங்களில் வரும் பிப். 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளியூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட பணகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையாா்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல் வள்ளியூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் டி.பி.சாலை, நம்பியான்விளை சுற்று வட்டாரங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.