கடையநல்லூா் அருகேயுள்ள பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) பெருமாள் தொடங்கி வைத்து ,மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் பணிகள் குறித்துப் பேசினாா். குழந்தைகளின் உரிமைகள், பாலின சமத்துவம் ,பேரிடா் மேலாண்மை குறித்து ஆசிரியா் பயிற்றுநா் காளிராஜ் பேசினாா். இதில், பள்ளித் தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.