வள்ளியூா், திருக்குறுங்குடி பகுதியில் பிப்.5-இல் மின்தடை
By DIN | Published On : 02nd February 2020 12:11 AM | Last Updated : 02nd February 2020 12:11 AM | அ+அ அ- |

வள்ளியூா், திருக்குறுங்குடி சுற்று வட்டாரங்களில் பிப். 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளியூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட வள்ளியூா் துணை மின் நிலையத்தில் வரும் 5-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...