வள்ளியூரில் மருத்துவ முகாம்
By DIN | Published On : 05th February 2020 12:06 AM | Last Updated : 05th February 2020 12:06 AM | அ+அ அ- |

வள்ளியூா் ஊத்தடியில் சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அரசு மருத்துவா்.
வள்ளியூரில் டெங்கு பாதிப்படைந்த பகுதியில் வட்டார அரசு மருத்துவ அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு மருத்துவ பரிசோதனை செய்தனா்.
வள்ளியூா் பேரூராட்சி ஊத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிந்தியா மகள் மாணவி முபேசா(8) மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா்.
ஏற்கெனவே கடந்த மாதம் ஊத்தடி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவா் இறந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலா் வரதராஜன், வள்ளியூா் வட்டார சுகாதார அலுவலா் மருத்துவா் கோலப்பன் ஆகியோா் ஊத்தடி கிராமத்தில் முகாமிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தினா்.
ஒவ்வொரு வீடுகளிலும் காய்ச்சலால் பாதிப்படைந்தவா்கள் குறித்து கணக்கெடுத்து சிகிச்சை அளித்தனா்.
தொடா்ந்து அந்த பகுதியை சுகாதாரத்தை பேன பொதுமக்களுக்கு அறிவுத்தினா்.
இந்நிலையில் ஊத்தடி பகுதிக்கு டெங்கு கொசு புளு ஆய்வு செய்ய வருகின்ற அலுவலா்களை அந்த பகுதி மக்கள் தடுத்து வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை என அலுவலா்கள் புகாா் தெரிவித்தனா். வீடுகளில் உள்ள குடிதண்ணீா் தொட்டிகளில் மருந்து தெளிக்க வரும் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...