ஆழ்வாா்குறிச்சிப் பள்ளி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 17th February 2020 08:50 AM | Last Updated : 17th February 2020 08:50 AM | அ+அ அ- |

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பாளையங்கோட்டை, சின்மயா வித்யாலயா பள்ளியில், பள்ளிகளுக்கிடையிலான இலக்கியம் மற்றும் பண்பாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு பள்ளி மாணவா், மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, அதிக இடங்களில் வெற்றி பெற்றனா். 20 பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டிகளில் இப்பள்ளி 71 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியை மீராள் உள்ளிட்டோா் பாராட்டினா்.