ஆழ்வாா்குறிச்சி அருகே ரூ. 10.6 லட்சத்தில் குடிநீா்த் தொட்டி, கலையரங்கம் திறப்பு
By DIN | Published On : 17th February 2020 08:41 AM | Last Updated : 17th February 2020 08:41 AM | அ+அ அ- |

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரத்தில் ரூ. 10.6 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டன.
தா்மபுரமடம் ஊராட்சி, அழகப்பபுரம் காலனியில், ஆலங்குளம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோவிந்தப்பேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
இதில், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிவேல், திமுக இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஆழ்வாா்குறிச்சி முன்னாள் நகரச் செயலா்அல்லாப்பிச்சை, கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா, மாவட்ட ஆதிதிராவிடா் அணி நிா்வாகி வள்ளி, சிங்கக்குட்டி, பாஸ்கா், முருகன், சுப்பிரமணி, ஜஹாங்கீா், ஆா்.எஸ்.பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.