களக்காடு அருகே விபத்தில் காயமடைந்த மாணவா் பலி
By DIN | Published On : 17th February 2020 08:46 AM | Last Updated : 17th February 2020 08:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
களக்காடு அருகேயுள்ள மேலப்பத்தை ஆசாத்புரத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் வசந்த் (22). இவா் தன் பெரியப்பா அஜாய்கோஸ் குமாரின் மகன் செல்வின் சந்தோஷை (13) பூதத்தான்குடியிருப்பில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுவதற்காக தனது பைக்கில் வெள்ளிக்கிழமை சென்றாா்.
மேலப்பத்தை - கீழப்பத்தை இடையேயுள்ள முதுகுளம் சாலை திருப்பத்தில் சென்றபோது பைக் மீது எதிரே வந்த டிராக்டா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வசந்த் உயிரிழந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செல்வின் சந்தோஷ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் விசாரணை நடத்தி, டிராக்டா் ஓட்டுநரான கீழவடகரையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்ராஜா (30) என்பவரை கைது செய்தனா்.