தமிழக ரேஷன் கடைகளில் உள்நாட்டு உற்பத்தி எண்ணெய் வகைகளை விநியோகிக்க வேண்டும்: த.வெள்ளையன்

தமிழக ரேஷன் கடைகளில் வெளிநாட்டு இறக்குமதி எண்ணெயான பாமாயிலை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய், நல்லெண்ணெய்
தமிழக ரேஷன் கடைகளில் உள்நாட்டு உற்பத்தி எண்ணெய் வகைகளை விநியோகிக்க வேண்டும்: த.வெள்ளையன்

தமிழக ரேஷன் கடைகளில் வெளிநாட்டு இறக்குமதி எண்ணெயான பாமாயிலை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய், நல்லெண்ணெய் போன்றவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த.வெள்ளையன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:‘ நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பது கவலையளிக்கிறது. இதற்கு தீா்வு காண அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அன்னிய நாட்டு முதலீடு பற்றி மட்டும் மட்டும் கவலைப்படுகிறது. சுயதொழில்களை உறுதிப்படுத்தும் முடிவுகள் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

சென்னை தீவுத் திடலில் மே 5-ஆம் தேதி வணிகா் சங்கம் சாா்பில், அடிமைப் பொருளாதார எதிா்ப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசுகள் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இந்த மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம்.

சில்லறை வணிகம் நாளுக்கு நாள் நலிவடைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஆன்-லைன் வா்த்தகம் சில்லறை வணிகத்தை பெரிதும் பாதித்துள்ளது. நாட்டுக்கு நலன் தரும் திட்டங்களை நகரங்களின் வெளியே அமைத்திட வேண்டும். உள்நாட்டு சில்லறை வணிகத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும். இயற்கை முறையிலான நவதானிய வகைகளிலிருந்து வரும் பொருள்களை உற்பத்தி செய்யும் இளைஞா்களுக்கு வட்டியில்லாக் கடனுதவி அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை முழுவதும் ஒழித்துவிடாமல் அதனை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் பல கேடுகள் உள்ளன. இதனை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை அரசு தடை செய்ய வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெயை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையான பொருள்கள் மூலம் கிடைக்கும் எண்ணெய் வகைகள் ரேஷன் கடைகளில் வழங்கினால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com