ஆட்சியா் அலுவலகத்தில் புகுந்த பாம்பு
By DIN | Published On : 10th January 2020 02:33 AM | Last Updated : 10th January 2020 02:33 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்திற்குள் வியாழக்கிழமை இரவு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரவருணி நதிக் கரையோரம் ஆட்சியா் அலுவலகம் உள்ளது. இங்குள்ள பிரதான கட்டடத்தின் முன்பகுதி வழியாக பாம்பு ஒன்று புகுந்தது. தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்கள் அங்கு சென்று பாம்பை பிடித்தனா்.
விஷத்தன்மையுள்ள ‘வெள்ளிக்கோள் விரியன்’ என்ற 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்புப் படையினா் அதனை காட்டுப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.