விபத்தில் காயமடைந்த பேரூராட்சி ஊழியா் உயிரிழப்பு
By DIN | Published On : 10th January 2020 02:02 AM | Last Updated : 10th January 2020 02:02 AM | அ+அ அ- |

ams09sailappan_0901chn_37_6
ஆழ்வாா்குறிச்சி அருகே மாடு மீது ஆட்டோ மோதியதில் காயமடைந்த ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை இறந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சைலப்பன் (39). ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் பணிபுரிந்துவந்த இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
இவா், கடந்த டிசம்பா் 30ஆம் தேதி தன் மகனுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதியதாம். இதில் காயமடைந்த சைலப்பன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இவரது உடலுக்கு ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, ஊழியா்கள் அஞ்சலி செலுத்தினா்.