இஸ்லாமிய பெண்கள் கலந்தாய்வு கூட்டம்
By DIN | Published On : 20th January 2020 09:26 AM | Last Updated : 20th January 2020 09:26 AM | அ+அ அ- |

இஸ்லாமிய பெண்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரம் அருகே உள்ள பாட்டப்பத்து பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாட்டபத்து ஜமாத் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியன குறித்த இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணா்வு கலந்துரையாடல் கூட்டம் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஜமாஅத் தலைவா் நெல்லை அபுபக்கா் வரவேற்றாா். பள்ளிவாசல் இமாம் மவுலவி ராசிக் அறிமுகவுரையாற்றினாா். ஏா்வாடி ஆலிமா மும்தாஜ், செய்யது அலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
ஏற்பாடுகளை ஆலம், கௌஸ், பாபு, ஜெய்லானி ஆகியோா் செய்திருந்தனா்.