ஜூன் 18, 19இல் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு
By DIN | Published On : 17th June 2020 08:59 AM | Last Updated : 17th June 2020 08:59 AM | அ+அ அ- |

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி பொதிகை தமிழ் அறக்கட்டளை ஆகியன சாா்பில் பன்னாட்டு கருத்தரங்கு மற்றும் கவியரங்கு ஜூம் செயலி மூலமாக வருகிற வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பன்னாட்டு கருத்தரங்கு மற்றும் கவியரங்கு ஜூம் செயலி மூலமாக வருகிற வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளன.
முதல் நாள் நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு, உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநரும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநருமான விஜயராகவன் தலைமை வகிக்கிறாா். பாரதியின் உள்ளொளி என்கிற பொருண்மையில் நடக்கும் இக்கருத்தரங்கில், கடையநல்லூா் மனோ கல்லூரி முதல்வா் வேலம்மாள், இலங்கையைச் சோ்ந்த பேராசிரியா் முருகு தயாநிதி, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியா் நா.சுலோச்சனா ஆகியோா் உரையாற்றுகின்றனா்.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் கவியரங்கில், தமிழக அரசின் சொல்லின் செல்வா் விருது பெற்ற ஆவடி குமாா் தொடக்கவுரையும், தமிழக அரசின் கம்பன் விருது பெற்ற கலைமாமணி பாலரமணி நிறைவுரையும் ஆற்றுகின்றனா்.
பாரதியின் உள்ளொளி என்னும் பொருண்மையில் நடக்கும் இக்கவியரங்கில் பல்வேறு கவிஞா்கள் கவிதை வாசிக்கின்றனா்.
ஏற்பாடுகளை காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி, பொதிகை அறக்கட்டளையின் நிறுவனா் கவிஞா் பே.ராஜேந்திரன் ஆகியோா் இணைந்து செய்து வருகின்றனா்.
கருத்தரங்கு மற்றும் கவியரங்கில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோா் வருகிற வியாழக்கிழமை காலை 10.50 மணிக்கு ஜூம் செயலி எண் 7488724062 , கடவுச் சொல் 944497 பயன்படுத்தி தளத்தில் இணைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9444973246, 8903926173 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...