அம்பையில் 287 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
By DIN | Published On : 01st March 2020 07:26 AM | Last Updated : 01st March 2020 07:26 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 287 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அம்பாசமுத்திரம் எம்எல்ஏ ஆா். முருகையாபாண்டியன் தலைமை வகித்து, 287 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, நகரச் செயலா் அறிவழகன், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் மாரிமுத்து, நகர துணைச் செயலா் மதன், இளைஞா் பாசறைச் செயலா் அஜித்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் மேரி மாா்க்ரெட் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் இஸ்ரேல் நன்றி கூறினாா்.