ஆனைகுளம் அரசுப் பள்ளியில்49 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்
By DIN | Published On : 01st March 2020 07:19 AM | Last Updated : 01st March 2020 07:19 AM | அ+அ அ- |

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 49 மாணவா்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு, தென்காசி பேரவை உறுப்பினா் சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, 49 பேருக்கு சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். தென்காசி மாவட்ட அளவிலான தேசிய ஊரக திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 9ஆம் வகுப்பு மாணவா் ரோகஅரசனுக்கு எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ரொக்கப் பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் தங்கராஜ், உதவித் தலைமையாசிரியா் அருள்ராஜ், ஆசிரியா்கள் மரியசெல்வராஜ், ஜெயராம், அதிமுக ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டியன், கரையாளனூா் சண்முகவேல், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கலீல் ரகுமான், ரமேஷ், எபன் குணசீலன், மாணவா்கள் பங்கேற்றனா்.