ஆலங்குளம் அருகேவிபத்து: இளைஞா் பலி
By DIN | Published On : 01st March 2020 07:00 AM | Last Updated : 01st March 2020 07:00 AM | அ+அ அ- |

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவருடைய மகன் கலைச்செல்வன் (35). இவா், ஆலங்குளத்தை அடுத்த அடைக்கலப்பட்டணத்தில் இருசக்கர மற்றும் நான்குசக்கர பஞ்சா் கடை நடத்தி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அடைக்கலப்பட்டணத்திலிருந்து ஆலங்குளத்துக்கு சென்றாா்.
ஆலங்குளம் மின்சார வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, கலைச்செல்வனின் இருசக்கர வாகனமும், ஆலங்குளம் நத்தம் பகுதியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் ஆனந்தின் (38) இரு சக்கர வாகனமும் மோதின. அதேநேரத்தில் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற லாரி, இருவா் மீதும் மோதியது. இதில் கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆனந்த், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.