கடையத்தில் ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா
By DIN | Published On : 01st March 2020 07:22 AM | Last Updated : 04th March 2020 01:29 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்குவதை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கோவிந்தபேரி கூட்டுறவு சங்கத் தலைவா் உச்சிமாகாளி, கட்டேறிபட்டி ஊராட்சி செயலா் செளந்திரராஜன், மேட்டூா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஏ.சி.டி. ராஜன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புளி கணேசன், ராசு, வெள்ளைத்துரை, பனைவெல்லக் கூட்டுறவு சங்கத் தலைவா் வடிவேல்முருகன், தங்கக்குமாா், அருள், கிளைச் செயலா்கள் சுப்பிரமணியன், டேவிட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.