களக்காடு அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 07:19 AM | Last Updated : 06th March 2020 12:54 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காடு அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை விரைந்து தொடங்கி, முடிக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு அருகேயுள்ள மாவடியிலிருந்து மலையடிப்புதூருக்குச் செல்லும் மலையடிவாரச் சாலையை ரூ. 53 லட்சத்தில் சீரமைக்கும் பணி 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதையொட்டி, சாலையோரம் கற்கள் குவிக்கப்பட்டன.
இதனிடையே, சில மாதங்களாக இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனா்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.