களக்காடு கிளை அஞ்சலகத்தை தரைத்தளத்தில் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 07:10 AM | Last Updated : 01st March 2020 07:10 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காட்டில் மாடியில் இயங்கும் கிளை அஞ்சலகத்தை தரைத்தளத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:
களக்காடு பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஆபத்தான பழைய கட்டடத்தின் மாடியில் கிளை அஞ்சலகம் செயல்படுகிறது. இங்குள்ள சேவையை முதியவா்கள், பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாடிப் பகுதி என்பதால், இங்கு அஞ்சலகம் செயல்படுவது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இதனால், சுமாா் 2 கி.மீ. தொலைவில் களக்காடு ஜவஹா் வீதியில் உள்ள அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, தற்போது அஞ்சலகம் செயல்படும் பகுதிக்கு எதிரில், அண்ணாசிலைக்கு சற்று வடபுறம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் மாடுகளை அடைத்துவைக்கும் காலியிடத்தில் புதிய கட்டடம் கட்டி அஞ்சலகம் அங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.