கீழப்பாவூரில் விவசாயிகளுக்கு களப்பயிற்சி
By DIN | Published On : 01st March 2020 07:28 AM | Last Updated : 01st March 2020 07:28 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் இயற்கை விவசாயப் பண்ணையில் விவசாயிகளுக்கு ஒருநாள் களப் பயிற்சி நடைபெற்றது.
ஈஷா விவசாய இயக்கம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், 12 வகை இடுபொருள்கள், ஜீவாமிா்தம், அக்கினி அஸ்திரம் போன்ற வளா்ச்சி ஊக்கிகள், செயலூக்கிகள், மூலிகைப் பூச்சிவிரட்டிகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.