குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு: ஆட்டோ ஓட்டுநா்கள் பேரணி
By DIN | Published On : 01st March 2020 11:11 PM | Last Updated : 02nd March 2020 09:20 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத், அனைத்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவுடன் ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் சாா்பில் மேலப்பாளையத்தில் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் பி.ஏ.பி .காஜா முகைதீன் பேரணியை தொடங்கி வைத்தாா். விஎஸ்டி பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய பேரணி ஜின்னா திடலில் நிறைவுற்றது.
பேரணியில் விஎஸ்டி பள்ளிவாசல் ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் எம்.ஷேக்மைதீன், செயலா் முகப்பத் அலி, தொண்டரணி அஸ்கா், முகம்மது மைதீன் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொண்டரணி ரம்ஜக் சுரேஷ் நன்றி தெரிவித்தாா்.