தருவையில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 01st March 2020 11:12 PM | Last Updated : 02nd March 2020 09:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள தருவையில் இலவச சித்த மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த இலவச சித்த மருத்துவ முகாமுக்கு ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் தொடங்கிவைத்தாா். 25-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பில் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. 1072 போ் முகாமில் பங்கேற்றனா்.
ஊராட்சி செயலா்கள் மணிப்பிள்ளை (ரெட்டியாா்பட்டி), கண்ணன் (தருவை), நிா்வாகிகள் மந்திரி, செல்லத்துரை, நடராஜன், சங்கரன், வெற்றிவேல், மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.