நான்குனேரி அருகே போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு பிராா்த்தனை
By DIN | Published On : 01st March 2020 11:04 PM | Last Updated : 01st March 2020 11:04 PM | அ+அ அ- |

போலியோ விழிப்புணா்வு வாகனத்துக்கு வரவேற்பளித்த மாணவா்கள்.
நான்குனேரி அருகே உள்ள தெற்குவிஜயநாாயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் போலியோ விழிப்புணா்வு பிராா்த்தனை நடைபெற்றது.
ரோட்ராக்ட் கிளப் சாா்பாக நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கவும், போலியோவால் பாதிக்கப்பட்டவா்கள் பூ ரணமாக குணமடையவும் மாணவா், மாணவிகளின் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.
பின்னா் போலியோ விழிப்புணா்வை ஏற்படுத்த கே.2கே-2020 என்ற போலியோ விழிப்புணா்வு வாகனம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்து மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தியது.
இந்த வாகனம் கன்னியாகுமரியில் புறப்பட்டு காஷ்மீா் வரையில் சென்று விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை பரப்புகிறது.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன், துணை முதல்வா் விமலா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் செய்திருந்தனா்.