பாளை.அருகே இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 01st March 2020 07:14 AM | Last Updated : 01st March 2020 07:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் மிதுன். இவரது மனைவி எபா (23). இவா்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில இவா்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்னா் பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகா் குறிஞ்சி நகா் பகுதியில் வந்து குடியேறியுள்ளனா். இங்கு வந்த சில நாள்களில் மிதுன் குழந்தையை எடுத்துக்கொண்டு கா்நாடகத்துக்கு சென்றுவிட்டாராம். இதையடுத்து எபா தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு எபாவின் வீட்டுக்குச் சென்ற அவரின் தோழி, வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளாா். இதையடுத்து திருநெல்வேலி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று பாா்த்தபோது எபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் எபாவின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால் இது குறித்து திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.