வள்ளியூரில் செய்தியாளா்- காவல்துறை நட்புறவுக் கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 07:24 AM | Last Updated : 01st March 2020 07:24 AM | அ+அ அ- |

வள்ளியூா்: வள்ளியூரில் செய்தியாளா்- காவல்துறை நட்புறவுக் கூட்டம் நடைபெற்றது.
வள்ளியூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராதாபுரம், நான்குனேரி வட்டார செய்தியாளா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தை தொடங் வைத்த ஏ.எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத் பேசியது; செய்தியாளா்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும். குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு சமூக மாற்றம் அவசியம்.
குற்றச்செயல்களை பிரசுரம் செய்யும் போது அதற்கான காரணம் மற்றும் தீா்வு குறித்தும் செய்தி வெளியிட்டால் சமூக மாற்றத்திற்கு வழிஏற்படலாம். செய்தியாளா்கள் நல்ல சமுதாயம் உருவாக முன்னோடிகளாக செயல்படவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் செய்தியாளா்களுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்ட வெற்றி பெற்றவா்களுக்கு காவல் ஆய்வாளா்கள் பரிசு வழங்கினா்.
இதில் காவல் ஆய்வாளா்கள் வள்ளியூா் திருப்பதி, பணகுடி சாகுல்ஹமீது, திசையன்விளை ஜூடி, அனைத்து மகளீா் காவல்நிலைய ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா்கள் பொன்சன், ஞானக்கண்ணு, செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.