விக்கிரமசிங்கபுரத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 01st March 2020 11:17 PM | Last Updated : 01st March 2020 11:17 PM | அ+அ அ- |

திமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
விக்கிரமசிங்கபுரம் நகர திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அடையக்கருங்குளம் அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் மூளை வளா்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டது.
தொடா்ந்து நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நகரச் செயலா் கணேசன் தலைமையில் திமுக கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநிலத் தோ்தல் பணிக்குழுச் செயலா் ராஜம் ஜான், மாவட்ட சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணை அமைப்பாளா் பீட்டா் சாமிநாதன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் குட்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வைகுண்டராமன், மாணவரணி துணை அமைப்பாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.