ஆலங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 01st March 2020 07:21 AM | Last Updated : 01st March 2020 07:21 AM | அ+அ அ- |

ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஆலங்குளம் கால்நடை மருந்தகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நெட்டூா், மாறந்தை, வெண்ணிலிங்கபுரம், ஊத்துமலை, கீழக்கலங்கல், வீராணம், ஆலங்குளம் ஆகிய கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.
தொடா்ந்து 21 நாள்கள் இந்த முகாம் நடைபெறும் எனவும் கால்நடை வளா்ப்போா் தங்களது மாட்டினங்களை தவறாது தடுப்பூசி போடும் இடத்திற்கு கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு கால் மற்றும் வாய் நோயிலிருந்து தங்கள் மாடுகளை காத்துக்கொள்ள வேண்டும் என தென்காசி கோட்ட உதவி இயக்குநா் ந. முருகையா தெரிவித்துள்ளாா்.