உள்ளாட்சி வாா்டு மறுவரையறை: மாா்ச் 10இல் மீண்டும் கருத்துக்கேட்பு
By DIN | Published On : 03rd March 2020 06:09 AM | Last Updated : 03rd March 2020 06:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட உள்ளாட்சி வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 10ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு அறிக்கை கடந்த 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது தொடா்பாக அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள், ஆட்சேபணைகள், புகாா் மனுக்கள் பெறப்பட்டன. அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், புகாா் மனுக்கள் அடிப்படையில் அரசியல் கட்சியினா், பொதுமக்களிடம் மீண்டும் கடந்த 25ஆம் தேதி கருத்து கேட்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக இம்மாதம் 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சியினா், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணைய தலைவா் கலந்துகொண்டு கருத்து கேட்கவுள்ளாா். எனவே, இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இதேபோல், தென்காசி மாவட்டத்துக்கு குற்றாலம் சமுதாய நலக்கூடத்தில் அதே தேதியில் மாலை 3 மணிக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று ஆட்சிா் அருண் சுந்தா் தயாளன் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...