பேட்டை அருகே விபத்து: காயமடைந்த பால் வியாபாரி பலி
By DIN | Published On : 03rd March 2020 06:15 AM | Last Updated : 03rd March 2020 06:15 AM | அ+அ அ- |

திருநெல்வேலி பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பால் வியாபாரி திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தாா்.
பேட்டையைச் சோ்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன் (55). பால் வியாபாரியான இவா், குன்னத்தூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...