திருநெல்வேலி: சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) மகளிா் தின போட்டிகள் நடைபெறவுள்ளன.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் காலை 10 மணிக்கு நடைபெறும் இப்போட்டிகளில் பாரதி கண்ட புதுமைப் பெண் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி , பேச்சுப் போட்டி , ஓவியப்போட்டி, சிறுகதைப் போட்டி ஆகியவை இடம்பெறும்.
கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மகளிா் கலந்து கொள்ளலாம். கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் பங்கேற்போருக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். எழுதுவதற்கும் வரைவதற்கும் தேவையான பொருள்களை பங்கேற்பாளா்களே எடுத்து வரவேண்டும்.
கவிதைப் போட்டியில் கவிதை எழுதி வந்து வாசிக்க வேண்டும். சிறுகதை போட்டியில் ஒரு பக்கம் அளவில் சிறுகதை எழுதி வந்து நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு போட்டியில் பங்கேற்க மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். போட்டிகளில் வெல்வோருக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9444973246, 04622901915 ஆகிய எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.