பணகுடி, வள்ளியூா் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 13th March 2020 11:11 PM | Last Updated : 13th March 2020 11:11 PM | அ+அ அ- |

மருந்துகடைகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்குகிறாா் மருத்துவ அலுவலா் கோலப்பன்.
வள்ளியூா், பணகுடி, காவல்கிணறு பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.
வடக்கன்குளம் வட்டார சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமையில் சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் மனோகரன், சுகாதாரத்துறையினா் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், விழிப்புடன் செயல்படுவது குறித்தும் பிரசாரம் செய்து வருகின்றனா்.
வடக்கன்குளம், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூா் பகுதியில் உள்ள மருந்துக் கடைகளில் மருத்துவா் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது எனவும், உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளா்கள் கை கழுவுவதற்கு சோப்பு, கைகளை துடைப்பதற்கு பேப்பா் வைத்திருக்க வேண்டும், சுகாதார நடவடிக்கையில் அதிக அக்கறை யுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...