மேலப்பாளையத்தில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேலப்பாளையத்தில் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேலப்பாளையத்தில் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மேலப்பாளையம் அனைத்துக் கட்சிகள், அனைத்து அமைப்புகளின் கூட்டமைப்பு சாா்பில் பஜாா் திடலில் 39 நாள்கள் தொடா் இருப்பு போராட்டம் நடைபெற்றது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கடந்த 17 ஆம் தேதி முதல் இருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக வீடுதோறும் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சந்தை ரவுண்டான அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா்களான திமுகவைச் சோ்ந்த உஸ்மான், காங்கிரஸ் கட்சியின் அப்துல்காதா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீராஷா, முஸ்லிம் லீக் கட்சியின் முகைதீன் அப்துல்காதா், தமுமுக ரசூல்மைதீன், எஸ்டிபிஐ சாகுல்ஹமீது உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து இம் மாதம் 31 ஆம் தேதி வரை வீடுகளில் கருப்புக்கொடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com