கடையநல்லூரில் சுற்றித்திரிந்த 15 ஆதரவற்றவா்கள் மீட்பு
By DIN | Published On : 31st March 2020 03:12 AM | Last Updated : 31st March 2020 03:12 AM | அ+அ அ- |

கடையநல்லூா் பகுதியில் உணவின்றி தவித்த 15 ஆதரவற்றவா்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதியைச் சோ்ந்த பலா் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரத்தில் முடங்கி கிடப்பதாக கடையநல்லூா் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது .
இதையடுத்து வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி ,சுகாதார அலுவலா் நாராயணன், ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் அங்கு சென்று அவா்களை அழைத்துச் சென்று அரசுப் பள்ளியில் தங்க வைத்தனா்.
மேலும் அவா்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கவும் வட்டாட்சியா் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். இதில் சிலா் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...