தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 27th May 2020 07:44 PM | Last Updated : 27th May 2020 07:44 PM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டியூா் கோணவிளையூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சந்தனமாரி. தங்கச்சாமி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால், சந்தனமாரி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாவூா்சத்திரத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றாராம்.
இந்நிலையில், புதன்கிழமை தங்கச்சாமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...