விதிமீறல்: இதுவரை 4,377 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 28th May 2020 08:34 AM | Last Updated : 28th May 2020 08:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கக் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டோா் மீது இதுவரை 4,377 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இம்மாதம் 31 வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கக் காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும், தேவையின்றி சுற்றுவோா் மீது வழக்குகள் பதிவு செய்வதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்திருந்தது.
அதன்படி, இம்மாவட்டத்தில் இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 6,535 போ் மீது 4,377 வழக்குகள் பதியப்பட்டு, 4,315 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.