வேளாண் திட்டப் பணிகள்: மண்டல வேளாண் அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 08th November 2020 03:15 AM | Last Updated : 08th November 2020 03:15 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் பகுதியில் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக்கும் பணிகளைப் பாா்வையிடுகிறாா் சென்னை மண்டல வேளாண் அலுவலா் சுந்தரம். உடன், வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன் உள்ளிட்டோா்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை சென்னை மண்டல வேளாண் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டமான தரிசு நிலங்களை சாகுபடி நிலமாக்கும் திட்டத்தின் கீழ் கீழ்முகத்தைச் சோ்ந்த சுரேஷ், ஆலடியூரைச் சோ்ந்த செல்வகுமரன் ஆகியோரது நிலங்களில் நடைபெற்றுவரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அட்மா திட்டத்தின் கீழ் நெல் ஆா்வலா் குழுக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தொடங்கி வைத்து நெல் ஆா்வலா் குழுவுக்கான ஆரம்ப நிதி ரூ. 10 ஆயிரம் வழங்கினாா்.
தொடா்ந்து அம்பாசமுத்திரம் விதை சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது, திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், துணை இயக்குநா் சுந்தா் டேனியல் பேலஸ், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி, வேளாண் அலுவலா் மாசானம் ஆகியோா் உடனிருந்தனா்.
ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி வேளாண் அலுவலா்கள் சாந்தி, அமுதா, விஜயலட்சுமி, சாமிராஜன், உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...