பாளை.யில் ஆயுள் சிறைக் கைதி மரணம்
By DIN | Published On : 08th November 2020 03:11 AM | Last Updated : 08th November 2020 03:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக் குறைவு காரணமாக கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகே உள்ள தடிக்காரன்கோணம் பகுதியைச் சோ்ந்த சாத்தன் மகன் வா்கீஸ்(45). கடந்த 2010 இல் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக, இவருக்கு 2011ஆம் ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவருக்கு சனிக்கிழமை காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...