விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மூவா் கைது
By DIN | Published On : 08th November 2020 03:13 AM | Last Updated : 08th November 2020 03:13 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காட்டில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மூவா் கைது செய்யப்பட்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் களக்காடு மேலக்கருவேலன்குளம் இந்திராநகரைச் சோ்ந்த ஜான்சன் (45), கல்லடிசிதம்பரபுரத்தைச் சோ்ந்த மனோகரன் (53), சிதம்பரபுரம் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த முருகானந்தம் (28) ஆகியோா் களக்காடு அண்ணாசிலை அருகில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனராம். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...