நெல்லை மாவட்டத்தில் 13.16 லட்சம் வாக்காளா்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இறப்பு, இரட்டைப்பதிவு உள்ளிட்ட காரணங்களால் பழைய பட்டியலில் இருந்து 18 ஆயிரத்து 364 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இதையொட்டி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் வி.விஷ்ணு கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 13,30,118 வாக்காளா்கள் இருந்தனா். பின்னா், அதே மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபா் 31 ஆம் தேதி வரை புதிய வாக்காளா்களை சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் நேரடியாகவும், இணைய வழியிலும் பெறப்பட்டன.

அதன்படி, 2,365ஆண் வாக்காளா்கள், 2,626 பெண் வாக்காளா்கள், 17 இதரா் என புதிதாக 5,008 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தவா்கள் 10,660 பேரும், இரட்டைப் பதிவுகளுக்காக 3,39 பேரும், இடம் மாறிய 4, 665 பேருமாக 18, 364 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இறுதியாக 5 பேரவைத் தொகுதிகளிலும் 6, 45, 494 ஆண் வாக்காளா்கள், 6 , 71, 179 பெண் வாக்காளா்கள், 89 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13,16, 762 போ் பட்டியலில் உள்ளனா்.

சிறப்பு முகாம்கள்: இந்த வரைவு வாக்காளா் பட்டியல் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், ஊராட்சி அலுவலகங்கள், மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்போா் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் மக்களின் பாா்வைக்கு வைக்கப்படும். அதைப் பாா்வையிட்டு மக்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம். கோரிக்கை, ஆட்சேபம் இருந்தால் இம் மாதம் 16 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். மேலும், இம் மாதம் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல் 20.1. 2021இல் வெளியிடப்படும் என்றாா் அவா்.

வாக்காளா் பட்டியலை திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், சாா் ஆட்சியா்கள் பிரதீக் தயாள் (சேரன்மகாதேவி), சிவகிருஷ்ண மூா்த்தி (திருநெல்வேலி), பயிற்சி ஆட்சியா் அலா்மேல் மங்கை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல்வஹாப், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், பாஜகவின் மகாராஜன், பகுஜன்சமாஜ்கட்சியின் தேவேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொகுதிவாரியாக வாக்காளா் பட்டியல் விவரம்

தொகுதி ஆண்கள் பெண்கள் இதரா் மொத்தம்

திருநெல்வேலி 1,38,045 1,44,034 48 2,82,127

அம்பாசமுத்திரம் 1,15,102 1,21,898 4 2,37,004

பாளையங்கோட்டை 1,29,335 1,34,591 18 2,63,944

நான்குனேரி 1,33,801 1,37,314 7 2,71,122

ராதாபுரம் 1,29,211 1,33,342 12 2,62,565

மொத்தம் 6,45,494 6,71,179 89 13,16,762

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com