தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றதாக 4 போ் கைது
By DIN | Published On : 17th November 2020 01:27 AM | Last Updated : 17th November 2020 01:27 AM | அ+அ அ- |

களக்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு காவல் உதவி ஆய்வாளா்கள் அருண்ராஜா, பழனி ஆகியோா் காவலா்களுடன் களக்காடு வட்டாரத்தில் உள்ள கீழவடகரை, கீழப்பத்தை, நான்குனேரி சாலை, பத்மனேரி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தியதில் அங்குபெட்டிக்கடை நடத்திவரும் மகராஜன் (38), துரை (40), சேதுராமன்துரை (40), செல்லப்பாண்டி (85) ஆகியோா் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 37 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...