நெல்லை சந்திப்பில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st November 2020 12:10 AM | Last Updated : 21st November 2020 12:10 AM | அ+அ அ- |

அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியூ) சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வேலைதிட்டத்தில் கிராமப்புற தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு ஊதியமாக ரூ.500 வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களை அடிமைப்படுத்தும் 4 தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.கணேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் டி.சங்கரபாண்டியன், மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் ஜி.ரமேஷ், நிா்வாகிகள் ரவி டேனியல், எம்.சுந்தர்ராஜ், அந்தோனிராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...