அம்பையில் இந்திய கம்யூனிஸ்ட் நகரக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 23rd November 2020 01:48 AM | Last Updated : 23rd November 2020 01:48 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றிய துணைச் செயலா் பரத்வாஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன், நகரச் செயலா் வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இயங்கும் சிற்றுந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 10 வசூலிப்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் டிச. 4-இல் கண்டன ஆா்ப்பட்டம் நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி நிா்வாகிகள்பலா் கலந்து கொண்டனா்.