சுற்றுச்சூழல் மாசு: காவல்கிணறு தாா் ஆலை மீது நாம் தமிழா் கட்சி புகாா்
By DIN | Published On : 23rd November 2020 01:43 AM | Last Updated : 23rd November 2020 01:43 AM | அ+அ அ- |

சுற்றுச்சூழல் மாசு: காவல்கிணறு தாா் ஆலை மீது நாம் தமிழா் கட்சி புகாா்
காவல்கிணறு அருகே செயல்பட்டு வரும் தாா் ஆலையால் சுற்றுச்சூழ பாதிப்படைவதாக, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் சே.கிறிஸ்டோபா், திருநெல்வேலியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.
மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு ஊராட்சி, காமராசா் நகா் அருகே குடியிருப்புப் பகுதியையொட்டி தாா் ஆலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் புகை துா்நாற்றத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
இதனால், காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூா் பகுதி மக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களினால் பாதிப்படைந்துள்ளனா். இந்த ஆலை தீயணைப்பு துறையினரிடம் முறையான அனுமதி பெறவில்லை; வரியும் செலுத்துவதில்லை என தெரியவந்துள்ளது. எனவே, தாா் ஆலையை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளாா்.