உலக மரபு வார சிறப்பு சுற்றுலா
By DIN | Published On : 23rd November 2020 01:46 AM | Last Updated : 23rd November 2020 01:46 AM | அ+அ அ- |

உலக மரபு வாரத்தையொட்டி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு சுற்றுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலதரப்பட்ட இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை இளையதலைமுறையினா் அறிந்து போற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் அல்லது உலக மரபு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பில் சிறப்பு சுற்றுலா நடைபெற்றது. மாணவா்கள், பொதுமக்கள் உள்பட 60 போ் பங்கேற்றனா். அரசு அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய இடங்களைப் பாா்வையிட்டனா்.
காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி, எழுத்தாளா் காமராசு, ஆசிரியா் மாணிக்கம் ஆகியோா் அகழாய்வுகளின் சிறப்புகளை எடுத்துரைத்தனா்.